top of page
Writer's picturechristcenteredconvo

Tamil Translation of 7 Last Words — “Truly, I say to you …” (Luke 23:43)

கிறிஸ் சிலுவையில் கிறிஸ்துவின் பக்கத்தில் இருந்த ‘நல்ல திருடனி’ன் மாற்றத்தின் முரண்பாடுபற்றி மீள்நோக்கம் செய்தல்.


தீயொழுக்கம் கொண்ட,நலிந்த வாழ்க்கையை வாழ்ந்த நடுத்தர வயதான ஆணைக் கற்பனை செய்யுங்கள். சமுதாயக் கேடு,எதற்கும் உபயோகமில்லாதவன் மற்றும் வாழ்க்கையில் முழுமையாகத் தோற்றுப்போனவன் எனக் கருதப்படுபவன். பலருடைய நம்பிக்கை இழந்தவன் – தனது நம்பிக்கையையும் சேர்த்து – இறுதி அருகில் உள்ளது என்று ஒருநாள் தனக்குப் போதும் என முடிவெடுத்தான். அதனால் அவன் ஒரு கொடிய குற்றத்தைச் செய்கிறான்,மதிப்புமிக்க ஒன்றைத் திருடுகிறான்,மோசஸின் பத்து கட்டளைகளை மீறி – தனக்கு மரண தண்டனையைப் பெறச் செய்யும் குற்றம் அது – கொல்கொத்தா மலையில் கர்த்தருக்குப் பக்கத்தில் இறக்கச் சிலுவையில் அறையப்பட்டான்.


இத்திருடன் பலவகைகளில் வீணான ஒரு மாசடைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். ஆனாலும் அவனின் அப்படிப்பட்ட வாழ்க்கையே அவனைத் தூய நிலத்தில் உயிரிழக்கச் செய்தது – அப்பாவி இரத்தம் சிந்திய ஓர் இடம்,ஆண்டவரின் கருணையும் மனிதனின் பைத்தியக்காரத்தனமும் சந்தித்த இடம்,பரிசுத்த அன்பு நித்திய நரகத்தை முறியடித்த இடம். இரட்சிப்பின் வரலாற்றில்இருந்த ஒரு முக்கிமான தருணத்திற்கு இத்திருடன் சாட்சியாக இருந்தான் – பூமியில் இயேசுவின் மிக அணுக்கமான தருணத்தில் அவரின் பக்கத்தில் இருந்தான் – நமக்கான கர்த்தரின் இறுதி பலி.

இவ்வாறு இருக்கையில்,சிலுவையில் இயேசு அறையப்பட்டதை பார்த்தபோது அத்திருடனின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்றும் மீட்பரின் பக்கத்தில் சிலுவையில் இருந்ததைப் பற்றி அவன் என்ன நினைத்திருப்பான் என்றும் நான் பலமுறை சிந்திந்திருக்கிறேன். இதெல்லாம் நிச்சயமாக ஆழ்ந்த விளைவை அளித்திருக்கும்,இத்திருடனின் மதமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்,‘நல்ல திருடன்’என்று நமக்குத் தெரிந்த இத்திருடனை.


‘நல்ல’திருடன் – என்ன ஒரு முரண்பாடு! ஒரு திருடன் எவ்வாறு நல்லவனாக இருக்க முடியும்?ஒரு குற்றவாளி மீட்கப்படுவதற்கு எப்படி தகுதியானவனாவான்?அதனால் அவனை நாம் ஏன் ‘நல்லவன்’என அழைக்கிறோம்?ஒருவேளை,இயேசுவே கடவுள் என்பதை அடையாளம் கண்டதில்தான் நல்லது உள்ளது. ஒருவேளை,நம் பாவப்பட்ட தன்மையை ஒப்புக்கொண்டதிலும் ஆண்டவரிடம் நம்மை இராச்சயித்தினுள் நுழையும்போது நம்மை நினைவில் வைத்துக்கொள்ளக் கேட்டுத் தாழ்மைப்படுத்துவதிலும் உள்ளது.


லூக்காவின் நற்செய்தியில் கூறப்பட்ட இரு செய்திகளை கருத்தில் கொள்வது மேலும் சுவாரசியமாக உள்ளது :நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்;இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,(லூக்கா 23:41) இங்கு நாம் மதமாற்றத்தின் முதல் கட்டத்தைக் காண்கிறோம் – திருடனே குற்றத்தைப் புரிந்துள்ளான் என அடையாளங்காணுதல். இங்கு அத்திருடன் தான் ஒரு பாவி என அறிந்தததையும் இயேசுவின் அருகில் இருந்த மற்றொரு திருடனை வேதனைப்படுத்துவதையும் காண்கிறோம். ஆராய்ந்து பார்த்தால்,அந்த ‘நல்ல’திருடன் இயேசு குற்றம் எதையும் புரியவில்லை என்பதை அடையாளம் கண்டு – இயேசுவிற்கு நீதி தவறாக வழக்கப்பட்டது என்பதை அறிந்தான் எனக் காணலாம்.


அடுத்து,“இயேசுவை நோக்கி,ஆண்டவரே நீர் உம்முடைய இராச்சியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” (லூக்கா 23:42)என்று ‘நல்ல’திருடன் கூறினான். இந்த ஒரு வாக்கியத்தின்வழி,இயேசு அரசர் என்பதை ‘நல்ல’திருடன் உணர்ந்திருந்தான் என்பதற்காகத் தெளிவான அறிகுறி தெரிகிறது;அவன் மண்ணுலக செல்வங்களுக்கான ஒரு தற்காலிக அரசராக இல்லாமல் ஒரு நிரந்தர அரசராக உணர்ந்தான். இயேசுவை ஆண்டவரென உணர்ந்ததை இங்கே மாற்றத்தின் இரண்டாவது நிலையாகக் காண்கிறோம்.


கத்தோலிக்க மரபின் புனித வெள்ளி திருச்சபையின்போது,சிலுவையின் பாதமுத்ததின்போது இதைத்தானே நாம் பாடுகிறோம்?இயேசுவிடம் நம்மை நினைவில் கொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம் அல்லவா?அப்போது நாமும் நல்ல ‘திருடர்கள்’அல்லவா?ஆம்,நீங்களும் நானும் நம் வாழ்வில் நமக்குச் சொந்தமற்றதை எடுத்துள்ளோம். மற்றவர்களிடமிருந்து நாம் திருடியதில்லையா - தொட்டறிய முடிந்த மற்றும் தொட்டறியமுடியாத வழிகள்?பிறரின் யோசனைகளை நாம் திருடியிருக்கலாம்,கிசுகிசு பேசுவதிலும் அவதூறு சொல்வதிலும் ஒருவரின் நற்பெயரை நாம் திருடியிருக்கலாம். அப்படியென்றால்,நாமும் ஒரு வகையில் ‘திருடர்கள்’தான் என்றும்,உண்மையான பாவிகள் என்றும் அடையாளம் காண வேண்டும். ‘நல்ல’திருடனைப் போல நாமும் யேசுவின் தலைமை ஸ்தானத்தை அடையாளம் கண்டு,அவரை நம் இரட்சகராகக் கொண்டு இரட்சிப்பின் மீட்பில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.


இதிலே ஓர் அழகிய முரண்பாடு உள்ளது:நாம் எப்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பதை அடையாளம் காண்கிறோமோ,நாம் எப்போது நாம் சிலுவையில் அறையப்படவும் நரகத்துக்குத் தகுதியுடைவர்கள் என்பதை உணர்கிறோமோ,ஆம் நாம் எப்போது நம்மை முழுமையாக தாழ்த்துகிறோமோ,அப்போதே கர்த்தர் நம்மை உயர்ந்த சொர்க்கத்திற்கு உயர்த்துகிறார். இயேசு ‘நல்ல’திருடனால் தனக்கு வழங்கப்பட்ட குறைந்த சலுகையை எடுத்தார்,அந்தத் தாழ்ந்த காணிக்கை அவர் ‘நினைவுப்படுத்துவதற்கு’எடுத்தார்,அதைச் சொர்க்கத்தின் வாக்குறுதியுடன் திருப்பிக் கொத்தார் – ஆண்டவர் ஒருவர் மட்டுமே தர முடிகிற ஒன்றை. மத்தேயு 14கில்,5 ரொட்டித் துண்டுகள் மற்றும் 2 மீன்கள் ஆகியவற்றின் பெருக்கலுக்கு ஈடாக. அவர் கட்டுப்பாடின்றி,ஆடம்பரமாக மனதாரக் கொடுக்கிறார். ஒருவேளை,சிலுவையில் ‘நல்ல’திருடனுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு,கெட்ட குமாரன் மற்றும் அவனின் தந்தையுடனான ஒன்றிணைத்தலுக்குச் சமமானது.


‘நல்ல’திருடனின் கோரிக்கைக்கு இயேசுவின் பதிலை அவன் கேட்டபோது அவனுக்கு எப்படி இருந்திருக்கும் என நான் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன்:‘‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.’’(லூக்கா 23:43). அந்த ‘நல்ல’திருடன் மீட்கப்பட்ட உணர்ச்சியில் திளைத்திருப்பான் என நம்புகிறேன். ஒரே தருணத்தில் இயேசு என்றென்றும் அவனை மீட்டுவிட்டதை எண்ணி,‘நல்ல’திருடன் உணர்ச்சிப் பெருக்கில் இருந்திருப்பான் என நினைக்கிறேன். இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்நேரத்தில் பேசிய வார்த்தைகள் அவர் இப்பூமியில் இருந்த காலத்தில் பேசிய மிக அன்பானவை என நான் உறுதியாகக் கூறுவேன்.


அதனால் நாமும் நம்முள் இருக்கும் ‘நல்ல’திருடனை அடையாளம் காணுவோமாக. பிறரிடமிருந்து நாம் திருடிய தருணங்களையும் நம் உள்ளார்ந்த பாவ குணத்தையும் ஒப்புக்கொள்ள செய்வோமாக.

அதற்கேற்ப இயேசுவே ஆண்டவர் என நினைவில் கொண்டு அந்த உலகறிந்த உண்மையைக் கொள்வோமாக. இயேசுவே ஆண்டவர் என்ற நம் அறிவிப்பு,அவரிடம் தாழ்ந்து இயேசுவை நம்மை நினைவில் கொள்ள கேட்கும்படி செய்க.


நல்ல திருடனிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் நம் மனத்தின் ஆழத்தில் பதிந்திருக்கட்டும்,இன்று – ஆம்,மாற்றம்,மனந்திரும்புதல்,மீட்பு ஆகியவற்றின் இந்நாளில் – நாமும் இயேசுவுடன் சொர்க்கத்தில் இருப்போம்.



Translated by © 2019 Christ Centered Convo/Jean Jesudass

Edited by © 2019 Christ Centered Convo/Jesudass Joseph

Original Article by © 2019 Christ Centered Convo/Christopher Chok

64 views0 comments

Recent Posts

See All

Exile

Comentarios


Post: Blog2_Post
bottom of page